UPDATED : செப் 09, 2015 12:00 AM
ADDED : செப் 09, 2015 10:49 AM
அ நிறம் | அளவு
சென்னை
: வன உயிரினம் பாதுகாப்பு வாரத்தை
முன்னிட்டு, வரும் 13ம் தேதி, கிண்டி, சிறுவர் பூங்காவில், மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
அக்டோபர் 8ம் தேதி, வன உயிரினம் பாதுகாப்பு வாரம்
கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, வரும் 13ம் தேதி கிண்டி, சிறுவர் பூங்கா வளாகத்தில், காலை 9:௦௦ மணி முதல் மாலை 4:௦௦ மணி வரை, வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்த
போட்டிகள் நடைபெற உள்ளன.
வன உயிரினம் குறித்த ஒரு பார்வை என்ற தலைப்பில், பேச்சுப்போட்டி, வினாடி-வினா மற்றும் ஓவிய போட்டி நடைபெறும். ஐந்து வயது முதல் கல்லுாரி வரை படிக்கும், மாணவ, மாணவியர் போட்டியில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு இல்லை. மேலும் விவரங்களுக்கு, 044-22351471 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
