தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை, அறிவியல் படிப்பிற்கு நாளை இறுதி கட்ட கவுன்சிலிங்

கலை, அறிவியல் படிப்பிற்கு நாளை இறுதி கட்ட கவுன்சிலிங்

கலை, அறிவியல் படிப்பிற்கு நாளை இறுதி கட்ட கவுன்சிலிங்


UPDATED : செப் 24, 2015 12:00 AM

ADDED : செப் 24, 2015 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2015 12:00 AM ADDED : செப் 24, 2015 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: கலை, அறிவியல் படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நாளை 25ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கடந்த ஜூலை மாதம் முதல் நடந்தது. இது வரை பத்து கவுன்சிலிங் நடந்துள்ளன. மொத்தமுள்ள 2118 இடங்களில் 2103 இடங்கள் நிரம்பின. மூன்று கல்லுாரிகளில் 15 சீட்டுகள் காலியாக உள்ளன.

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் பி.ஏ.,பிரெஞ்சு-5, தாகூர் கலை கல்லுாரியில் பி.ஏ.,பிரெஞ்சு-2, தொழில்முறை ஆங்கிலம்-2, வில்லியனுார் கஸ்துாரிபா மகளிர் கல்லுாரிகயில் பி.ஏ,. சமூகப் பணி-2, வரலாறு-2 என காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நாளை 25ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் உள்ள கப்பாஸ் அலுவலகத்தில் நடக்கிறது. 

விருப்பமுள்ள மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். முன்னதாக கவுன்சிலிங்கிற்கு வருவது கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க உதவும் என, கப்பாஸ் கன்வீனர் சசிகாந்த தாஸ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us