ஆன்மிகம் பரப்பும் ஜப்பான் பதிப்பகம்
ஆன்மிகம் பரப்பும் ஜப்பான் பதிப்பகம்
ஆன்மிகம் பரப்பும் ஜப்பான் பதிப்பகம்
UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 10:03 AM

ஜப்பானில் ஆன்மிகம் மற்றும் வாழ்வியல் நெறி சார்ந்த கருத்துக்களை பரப்பிய ரியா ஒகாவா, 1956ல் பிறந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.இவரின் ஆன்மிக மற்றும் வாழ்வியல் போதனைகளை, ஜப்பானின் பாசிட்டிவ் பியூச்சர் லேர்னிங் எனும் அமைப்பு 3,150 புத்தகங்களாக தொகுத்து, உலகமெங்கும் பல மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது.நடப்பாண்டு முதன் முறையாக, சென்னை புத்தகச் சந்தையில் அரங்கு அமைத்து, ரியா ஒகாவாவின் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.அரங்கு நிர்வாகி, ஜப்பானின் ரினா, 36 கூறியதாவது:இந்தியாவில் எங்களுக்கான புத்தகங்களை அச்சிடும் நிறுவனம் வழிகாட்டுதல்படி, பபாசி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, எங்களுக்கு அரங்கு தர கோரியிருந்தோம்; அவர்களும் ஒதுக்கினர்.இந்த சந்தை, உண்மையிலேயே வியப்பாக உள்ளது. ஆயிரமாயிரம் வாசகர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து, புத்தகங்களை வாங்கிச் செல்வது, உண்மையிலேயே பேராச்சரியம். இந்த இடத்தில் நாங்களும் அரங்கு அமைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.


