திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்

மலையின் பெயரை மாற்றும் முயற்சி
சிக்கந்தர் மலை என்ற கூற்றைப் பொறுத்தவரை, 1920ல் நீதிமன்றம் மலையின் பெயரை 'திருப்பரங்குன்றம் மலை' என திட்டவட்டமாகக் கூறியுள்ளது. வருவாய்த்துறை பதிவுகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரில் உள்ளன. மலைக்கு 'திருப்பரங்குன்றம் மலை'என்று பெயரிடப்பட்டபோது, 'மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் கட்சி அமைப்பு' என தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா மசூதியில் விருந்து நடத்தப் போவதாக ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர்.
புனிதத்தை பாதுகாக்கும் பக்தர்கள்
சன்னிதி தெருவில் இறைச்சிக்கடை இல்லை. கோவிலிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இறைச்சிக்கடை இல்லை. 300 மீட்டருக்கு மேல் பிராய்லர் கோழிக்கடை இல்லை. உண்மையில் திருப்பரங்குன்றத்திலுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் அசைவ உணவு சமைப்பதை அனுமதிப்பதில்லை.
தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
மாறுபட்ட கருத்து அடிப்படையில் இரு நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்ததால் தகுந்த உத்தரவிற்காக இதை, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். தலைமை நீதிபதியின் பரிந்துரைப்படி மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அவர் பரமசிவம், சோலை கண்ணன், ராமலிங்கம் மனுக்களை விசாரித்தார்.
விலங்குகளை பலியிடும் நடைமுறை
மதுரை மாவட்ட நீதிமன்றம்,'நெல்லித்தோப்பு மற்றும் தர்கா பகுதியைத் தவிர முழு மலையும் கோவிலுக்குச் சொந்தமானது,' என, 1920ல் சிவில் வழக்கில் உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பில் விலங்குகள் பலியிடப்பட்டதற்கான குறிப்பு இல்லை.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பழங்கால நினைவுச்சின்னப் பாதுகாப்புச் சட்டப்படி மத்திய தொல்லியல் துறை 1908ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் மலையில் தெற்குப் பகுதியில் உள்ள பாறை குகைகள் மற்றும் கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டன. இதன் பரப்பளவு, 50 சென்ட்.மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு பின்னால் உள்ள மலைகளின் மேற்குச் சரிவில் பஞ்ச பாண்டவர் படுகைகள், குகை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக, 1923ல் அறிவிக்கப்பட்டது.
பாராட்டு
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முருக கடவுளுக்காகவும், பக்தர்களுக்காகவும் தொடர்ந்து பல இன்னல்களையும் தாண்டி வெற்றி பெற்ற ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சோலை கண்ணன், இந்த வழக்கில் வாதாடி ஜெயித்த நமது சமாஜம் மூத்த ஆலோசகர் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன்


