யு.பி.எஸ்.சி., அனுப்பிய மூவர் பட்டியல்; உச்ச நீதிமன்றத்தை நாட அரசு முடிவு?
யு.பி.எஸ்.சி., அனுப்பிய மூவர் பட்டியல்; உச்ச நீதிமன்றத்தை நாட அரசு முடிவு?
யு.பி.எஸ்.சி., அனுப்பிய மூவர் பட்டியல்; உச்ச நீதிமன்றத்தை நாட அரசு முடிவு?

குற்றச்சாட்டு
இப்பணிக்கு புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியலை, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதற்கிடையே, பொறுப்பு டி.ஜி.பி.,யாக, நிர்வாக பிரிவில் பணிபுரிந்த வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார்.
இதுபற்றி, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:
டில்லியில் யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தபோதே, 'சீமா அகர்வால், சட்டம் - ஒழுங்கு பிரிவில் குறைந்த ஆண்டுகளே பணிபுரிந்துள்ளார். கூடவே, அவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராக இருந்தபோது, உதவி இன்ஸ்பெக்டர் தேர்வை முறையாக நடத்தவில்லை.
ஏற்க மறுப்பு
சந்தீப் ராய் ரத்தோட் மீது விஜிலென்ஸ் விசாரணை நிலுவையில் உள்ளது. அதேபோல ராஜிவ்குமார் மீதும் குற்றசாட்டுகள் உள்ளன. இதனால், தற்போது பொறுப்பு டி.ஜி.பி.,யாக உள்ள வெங்கட்ராமனை, தேர்வு பட்டியலில் மூன்றாவது இடத்தில் வைக்க வேண்டும்' என்றெல்லாம், தமிழக அரசு சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை, யு.பி.எஸ்.சி., ஏற்க மறுத்துவிட்டது.


