Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனம்: சீமான்

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனம்: சீமான்

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனம்: சீமான்

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனம்: சீமான்

ADDED : செப் 25, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''பா.ஜ., கொள்கை எதிரி என்றால், விஜய்க்கு காங்கிரஸ் கொள்கை நண்பனா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது,'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நீங்களாக தீர்ப்பை எழுதக்கூடாது; வழக்கு வந்த பின் பேசுவோம்; அதெல்லாம் ஒரு சமூக குப்பை. அந்த சமூக குப்பையை கிளறக்கூடாது.

இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு என் கிட்ட வந்து கேள்வி கேட்பதற்கு, முதலில் வெட்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் கல்வி, மருத்துவம் தான் மிகப்பெரிய வியாபாரம். அதற்கெல்லாம் என்ன வரி போடப்பட்டுள்ளது. எல்லா கல்வி நிறுவன முதலாளிகளும் அறக்கட்டளை என்ற பெயரில் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். வரும் 2026ல் வருவது மற்றவர்களுக்கு தேர்தல்; எங்களுக்கு தேசிய இனத்தின் விடுதலை.

மற்றவர்களுக்கு மரம்; எனக்கு உயிர். மரத்திடம் ஓட்டா இருக்கிறது; சீமான் மரத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர். மரத்திடம் ஓட்டு இல்லை; என் உயிர் இருக்கிறது.

எங்களை த.வெ.க., விமர்சிக்கிறது. அதை ரசித்து சிரித்துக் கொள்ள வேண்டும். விஜய் கட்சி சிறு பிள்ளைகள் முதலில் பக்குவப்பட வேண்டும். அவர்களுக்கு, கருத்தை கருத்தால் எதிர்கொண்டு மோத வேண்டும் என்பது தெரியவில்லை.

'பா.ஜ., கொள்கை எதிரி; தி.மு.க., அரசியல் எதிரி' என விஜய் பேசுகிறார். அப்படியென்றால், தி.மு.க.,வின் கொள்கையில் உடன்பாடும்; பா.ஜ.,வின் அரசியல் செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடும் உள்ளதா; இதை சொல்ல வேண்டாமா?

பா.ஜ., கொள்கை எதிரி என்றால், பா.ஜ.,வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள காங்., உங்களுக்கான கொள்கை நண்பனா? பா.ஜ., கொள்கைக்கும், காங்., கொள்கைக்கும் ஒரே ஒரு வேறுபாடு காட்டுங்கள்; இரண்டு கட்சியின் கொள்கையும் ஒன்று தான்; கட்சிகளின் பெயர்கள் தான் வேறு வேறு.

பிரசாரத்தில் விஜய் பேசும்போது, ஜாதி, மொழி, இனம் என பிரிக்கின்றனர் என்கிறார். மொழி, இனம் என பேசும் போதே, அடிப்படை அரசியல் தெரியவில்லை என வந்து விடுகிறது.

என் குறுக்கே தாவி ஓடிக்கொண்டு இருப்பதால், அண்ணனாக கேள்வி கேட்பேன். தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்போது, முதலில் காங்கிரசை தான் ஒழிக்க வேண்டும்.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மன்னராட்சியை தொடர்ந்து காங்கிரஸ் செய்து வருகிறது. பிறகு ஏன் அவர்களை பற்றி பேசவில்லை? விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அவரை எதிர்ப்பதற்காக நான் வேலை செய்யவில்லை.

அண்ணன் - தம்பி சண்டையை இழுத்து விடாதீர்கள். எங்களுக்குள் எல்லா விஷயங்களிலும் முரண் இருக்கிறது. அதை, விஜய் முதலில் சரி செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

விஜய் மேல் இருக்கும் அக்கறையில் தான், அவர் கூறும் கருத்துகளை எதிர்த்து வருகிறேன். அடுத்தவன் பேச்சை கேட்காதே; இந்த அண்ணன் பேச்சை கேளு. தப்பு தப்பாக எழுதி தருபவர்கள் பேச்சை கேட்காதே என்று தான் சொல்கிறேன். அது, விஜய்க்கு புரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us