/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல் திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்
திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்
திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்
திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்
ADDED : ஜூலை 30, 2024 05:13 AM
திருபுவனை: திருபுவனையில் 100 நாள் திட்ட பணியை பாதியில் நிறுத்தியதால் பயனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை பெரியபேட் பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஏரி மற்றும் குளங்கள் துார்வாறும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 9.00 மணிக்கு பெரியபேட் பகுதி மக்கள் 100 நாள் வேலை திட்டப் பணிக்குச் சென்றனர். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தற்போது வேலை நிறுத்தப்பட்டுள்ளது அடுத்த வாரம் வேலைக்கு வருமாறு கூறியுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த பயனாளிகள், திருபுவனை மேம்பாலம் அருகில் காலை 9.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருபுவனை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசார் அதிகாரியிடம் பேசி 100 நாள் வேலை திட்ட பணியை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று காலை 10.30 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.