/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம் முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்
முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்
முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்
முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்
ADDED : ஜூலை 30, 2024 05:13 AM
வில்லியனுார்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு வில்லியனுார் சிவசுப்ரமணிய சுவாமிக்கு 308 பால் குடம் ஊர்வலம் சென்று சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர்.
வில்லியனுார் சுந்தரமூர்த்தி வினாயகபுரம் மேற்கே உள்ள வள்ளிதேவ சேனா சிவசுப்ரமணிய கோவிலில் ஆடி கிருத்தியை முன்னிட்டு நேற்று காலை 7:15 மணியளவில் கணபதிேஹாமமும், 9:30 மணியளவில் 308 பால்குடம் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வில்லியனுார் மாட வீதிகள் வழியாக மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
பகல் 11:30 மணியளவில் சுவாமிக்கு 308 பால்குடம் அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து 12:00 மணியளவில் தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் உற்சவதாரர்கள் செய்தனர்.