/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் நடுரோட்டில் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு புதுச்சேரியில் நடுரோட்டில் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் நடுரோட்டில் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் நடுரோட்டில் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் நடுரோட்டில் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 11, 2024 05:46 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடுரோட்டில் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கீழ்புத்துப்பட்டு, கொங்கையம்மன் நகர், கருமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சூர்யா. நேற்று காலை 11:30 மணிக்கு, தனது பஜாஜ் பல்சர் பைக்கில் புதுச்சேரி வந்தார். இந்திரா சிக்னலில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்றபோது, இடிக்கப்பட்ட நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் எதிரே சென்ற போது திடீரென பைக் தீப்பற்றி எரிய துவங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத சூர்யா, பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு தள்ளி நின்றார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர். பைக் தீப்பற்றி எரிந்ததால், பஸ் நிலையம் நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் சில நிமிடம், நெல்லித்தோப்பு மார்க்கெட் சிக்னல் அருகிலேயே நிறுத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், சூர்யா கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்த சூர்யா, பைக்கை பழுதுபார்ப்பதிற்காக, புதுச்சேரிக்கு கொண்டு வந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.