/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுச்சேரி வாலிபர் தமிழ் முறைப்படி திருமணம் பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுச்சேரி வாலிபர் தமிழ் முறைப்படி திருமணம்
பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுச்சேரி வாலிபர் தமிழ் முறைப்படி திருமணம்
பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுச்சேரி வாலிபர் தமிழ் முறைப்படி திருமணம்
பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுச்சேரி வாலிபர் தமிழ் முறைப்படி திருமணம்
ADDED : ஜூன் 11, 2024 05:49 AM
புதுச்சேரி: பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கு தமிழ் முறைப்படி புதுச்சேரி வாலிபருடன் திருமணம் நடந்தது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் பி.டெக் பட்டதாரி வெங்கட்ராமன். பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகிறார்.
அங்கு பி.பார்ம் படித்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா என்ற பெண்ணுடன் வெங்கட்ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கிலேசி பெத் சிம்பானன் ஓபாவிற்கு, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மணமக்கள் இருவரும் புதுச்சேரி வந்தனர். நேற்று காலை முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவிலில், இரு வீட்டார் முன்னிலையில், தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது.
திருமண விழாவை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த உறவினர்கள் யூடியூப் லைவ் மூலம் பார்த்து மணமக்களை வாழ்த்தினர்.