/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 04:17 AM
புதுச்சேரி: புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி, பொருளாளர் செல்வராணி, அமைப்பு செயலர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சத்யா, பிரேமதாசன், ரவிச்சந்திரன் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது, நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படியை வழங்குவது, 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 50 சதவீத நிலுவை ஊதியம் வழங்குவது, அரசு தரப்பில் பணிக்கொடையை முடக்கும் வகையில், உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.