குட்கா விற்ற முதியவர் மீது வழக்கு
குட்கா விற்ற முதியவர் மீது வழக்கு
குட்கா விற்ற முதியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 10, 2024 06:54 AM
நெட்டப்பாக்கம் : மடுகரை இந்திராநகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பலராமன் 62, இவர் அதே பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் பங்க் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை இளைஞர்களுக்கு விற்பதாக மடுகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி சம்பவ இடத்திற்கு சென்று கடையை ஆய்வு செய்தார்.
இதில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், சிகரெட் உள்ளிட்ட 3 ஆயிரம் மதிப்பிலான போதைபொருட்களை பறிமுதல் செய்து, பலராமன், மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.