/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவளக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு தவளக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
தவளக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
தவளக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
தவளக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 17, 2024 06:27 AM

புதுச்சேரி, : தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 7 ஆக இருந்த பாட வேளை, 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நேற்று காலை 10 மணியளவில், தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு ஆய்வுக் கூடங்களில் உள்ள உபகரணங்கள் முறையாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் வகுப்பறைகளுக்கு சென்று மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, ''மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பான பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு படிப்பதற்கு ஏதுவாக பாடக் குறிப்புகளை தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றனர். '' அதற்கு கலெக்டர் குலோத்துங்கன், பாடக்குறிப்புகளைத் தமிழில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளி முதல்வருக்கு உத்தரவிட்டு 10.30 மணியளவில் புறப்பட்டு சென்றார்.''