ADDED : ஜூலை 17, 2024 06:27 AM

பாகூர் : பாகூர் தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுருத்தி, இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூ., பாகூர் தொகுதி குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தொகுதி துணை செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம் கோரிக்கைகளை வலியுருத்தி பேசினார். மாநில குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர் அமுதா, மாநில குழு விஜயபாலன் உள்ளிட் டோர் வாழ்த்தி பேசினர்.
பாகூர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை மறு அளவீடு செய்து, துார்வாரிட வேண்டும். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, சமுதாய நல வழி மையமாக தரம் உயர்த்த வேண்டும். பூட்டி கிடக்கும் பொது கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டது. இது தொடர்பான மனுவை, பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணனிடம் அளித்தனர்.