ADDED : ஜூன் 14, 2024 05:56 AM
புதுச்சேரி: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி;
குவைத்தில் தீவிபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தாகவும் வந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த துயரமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களின் துயரங்கள், சோகத்திலும் எனது இதயமும் இணைந்துள்ளது. இத்தருணத்தில் குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அனைவரும் உதவிடும் வகையில் துரித நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள மத்திய அரசு பணி பாராட்டத்தக்கது. இற்ந்தவர்கள் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிராத்திக்கின்றேன்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.