/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வக்பு வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல் வக்பு வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
வக்பு வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
வக்பு வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
வக்பு வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
ADDED : ஜூன் 14, 2024 05:57 AM

புதுச்சேரி: வக்பு வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., சிறுபான்மையினர் அணி வலியுறுத்தியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, புதுச்சேரி தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் அமைப்பாளர் முகம்மது ஹாலிது தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் சுனில் வரவேற்றார்.
துணை அமைப்பாளர்கள் ஐசக்நேசமணி, முகமது இஸ்மாயில், நாகூர் மீரான், முகமது இஸ்மாயில் பாஷா, சையது அபுதாஹீர், மரிஜோசப் திவி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை, சிறுபான்மை அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது. முஸ்லீம் சமுதாய மக்களுக்கு உதவுவதற்காக புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்ட வக்பு வாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.