/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு கருணை தொகை கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு கருணை தொகை
கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு கருணை தொகை
கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு கருணை தொகை
கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு கருணை தொகை
ADDED : ஜூன் 14, 2024 05:58 AM

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு டி.ஆர். நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி மீனாட்சி.
இவர்களின் மகள்கள் மோகனா, 16; லேகா, 14; இருவரும் சுப்ரமணிய பாரதியார் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தனர்.
மீனாட்சியின் குடும்ப நண்பர்களான சாரம் பாலாஜி நகர் கிேஷார், 17; டிப்ளமோ கேட்ரிங் மாணவர். எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் அருகே வசிக்கும் முருகையன் மகன் நவீன், 17; பிளஸ் 2 மாணவர்.
இவர்கள் நான்கு பேரும் கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி பழைய துறைமுகம் பகுதியில் கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 20 லட்சம் ரூபாய் கருணை தொகையினை முதல்வர் ரங்கசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.