ADDED : ஜூலை 26, 2024 04:25 AM

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த வாதானுார் பாட்டை வீதிச் சேர்ந்தவர் துரைசாமி, 75; கூலி தொழிலாளியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 23ம் தேதி காலை 3:00 மணிக்கு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடுகளில் தேடியும் துரைசாமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் பாரதி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, துரைசாமியை தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.