/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரெயின்போ நகர் பூங்காவில் உடற்பயிற்சி மையம் திறப்பு ரெயின்போ நகர் பூங்காவில் உடற்பயிற்சி மையம் திறப்பு
ரெயின்போ நகர் பூங்காவில் உடற்பயிற்சி மையம் திறப்பு
ரெயின்போ நகர் பூங்காவில் உடற்பயிற்சி மையம் திறப்பு
ரெயின்போ நகர் பூங்காவில் உடற்பயிற்சி மையம் திறப்பு
ADDED : ஜூலை 26, 2024 04:24 AM

புதுச்சேரி: ரெயின்போ நகர் பூங்காவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி மையத்தை ஜான்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
புதுச்சேரி ரெயின்போ நகர், 45 அடி சாலையில் தமிழ்ச் சங்கத்திற்கு எதிரில் வனத்துறை சிறுவர் பூங்கா உள்ளது. நகர பகுதியில் அமைந்துள்ள பூங்கா என்பதால் காலை மற்றும் மாலையில் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இப்பூங்காவில், மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். உழவர்கரை நகராட்சி சார்பில், உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் பூங்காவில், பொருத்தப்பட்டுள்ளது. அதனை, காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் எட்வர்டு சார்லஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.