ADDED : ஜூலை 30, 2024 05:08 AM

புதுச்சேரி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சாரதாம்பாள் கோவிலில் சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
எல்லைப்பிள்ளைச்சாவடியில் சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது.
ஆடி கிருத்திகையையொட்டி, கோவிலில் உள்ள முருகர் சன்னதியில் சுவாமிக்கு அபிேஷகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.
பின், கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.