/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் காரைக்கால் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
காரைக்கால் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
காரைக்கால் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
காரைக்கால் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 11, 2024 06:00 AM

காரைக்கால்: காரைக்காலில் ஞானாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகள் முழு வீச்சில் முடிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து 7ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
நேற்று 6ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடாகி யாகசாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி கோவிலை வலம் வந்து வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
தொடர்ந்து அகத்தீஸ்வரர் சுவாமி, ஞானாம்பிகை அம்மன் உள்ளிட்ட மூலவர்களுக்கு மகாபிஷேகமும்,மகாதீபாராதனையும் நடந்தது.
இவ்விழாவில் அமைச்சர் திருமுருகன்,எம்.எல்.ஏ., சந்திர பிரியங்கா,முன்னாள் எம்.எல்.ஏ.,ஒமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.