/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுவர் இடிந்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் வழங்கல் சுவர் இடிந்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் வழங்கல்
சுவர் இடிந்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் வழங்கல்
சுவர் இடிந்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் வழங்கல்
சுவர் இடிந்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் வழங்கல்
ADDED : ஜூன் 11, 2024 05:59 AM

புதுச்சேரி: தேங்காய்த்திட்டில் வாய்க்கால் சீரமைக்கும் பணியின்போது, மின்துறை சுற்றுமதில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி தொகையை முதல்வர் ரங்கசாமி வழங்கினர்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு வசந்த் நகரில், கடந்த ஏப். 1ம் மரப்பாலம் மின் நிலைய சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள வாய்க்கால் சீரமைக்கும் பணியின்போது, மதில் சுவர் இடிந்து விழுந்ததில், அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ், ராஜேஷ்கண்ணன், அந்தோணிசாமி, கமலஹாசன், பாலமுருகன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
சீனிவாசன், பாலமுருகன், குணசேகரன் ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.
சுவர் இடிந்து விழுந்து இறந்த 5 பேரின் குடும்பத்திற்கு, தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்த 3 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி தொகையை பொதுப்பணித்துறை சார்பில் நேற்று வழங்கப்பட்டது.
சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினரிடம் நிவாரண தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சம்பத் எம்.எல்.ஏ., அரசு செயலர் ஆசிஷ் மாதவ்ராவ் மோரே, பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்தகுமார் ரே, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.