Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தண்டித்துள்ளது எதிர்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தண்டித்துள்ளது எதிர்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தண்டித்துள்ளது எதிர்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தண்டித்துள்ளது எதிர்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 30, 2024 05:01 AM


Google News
புதுச்சேரி: பா.ஜ.,விற்கு ஓட்டளிக்காத புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தண்டித்துள்ளது என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டியுள்ளார்.

பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசினை கண்டித்து அண்ணாசாலை எதிரே தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா அவர்கள் பேசியதாவது:

பிரதமர் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்றார். ஆனால் புதுச்சேரி மக்கள் ஓட்டளிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் ஒரு சிறு நிதியைக்கூட புதுச்சேரிக்கு ஒதுக்கவில்லை. விமான நிலையம் விரிவாக்கத்திற்கு ரூ. 425 கோடி தருவதாக சொன்னதை தரவில்லை.

புதுச்சேரி ஜிப்மருக்கு கடந்த ஆண்டைவிட 50 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

16-வது நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. ரூ.2 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., கட்டுகிற புதுச்சேரிக்கு வெறும் ரூ. 500 கோடி தான் தருகின்றனர். ஐந்து ஆண்டுகாலம் ஜி.எஸ்.டி., நஷ்ட ஈட்டை தராமல் இருக்கிறது. மத்திய அரசு. வருமான வரி மூலம் ரூ.1,500 கோடி ஈட்டுகிறது. அதில் ஏதேனும் பங்களிப்பு இருக்கிறதா என்றால் இல்லை. இப்படி எல்லா வகையிலும் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

வெளியேற வேண்டும்

எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, வரும் 2-ம் தேதி புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.ஆனால் பா.ஜ.,வில் 7 எம்.எல்.ஏ.,க்கள் நாங்கள் இல்லாமல் எப்படி சட்டசபை நடக்கும் என்று சவால் விடுத்துள்ளனர். முதல்வர் தனது சுயகவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். இதை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us