Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியோர் உதவித்தொகையை உயர்த்த முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

முதியோர் உதவித்தொகையை உயர்த்த முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

முதியோர் உதவித்தொகையை உயர்த்த முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

முதியோர் உதவித்தொகையை உயர்த்த முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை முதல்வருக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

ADDED : ஜூலை 30, 2024 05:00 AM


Google News
புதுச்சேரி: முதியோர், விதவைகள் உதவித்தொகையை 3 ஆயிரம் ரூபாயாக பட்ஜெட்டில் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2021 சட்டசபை பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை புதுச்சேரி மக்களுக்காக செய்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டினை முதல்வர் தாக்கல் செய்ய உள்ளார். மக்கள் நலம் பயக்கும் திட்டங்கள் இதில் இடம்பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் வழங்காத அளவிற்கு முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் ஆகியோருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலமாக மாத உதவித் தொகை 2000 வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முதியோர் உதவித் தொகை முதல்வரால் அடிக்கடி உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

ஆனால், மாநிலத்தில் விதவை உதவித் தொகையானது நீண்ட நாட்களாக உயர்த்த படாமல் உள்ளது.

கணவரை இழந்த மகளிர் பலரது மாதாந்திர செலவுக்கு இந்த உதவி தொகையானது மிக பயனுள்ளதாக இருந்து வருகிறது.

எனவே வரும் பட்ஜெட் டில் விதவை உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக முதல்வர் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us