/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பால் சொசைட்டி ஊழியர் சாலை விபத்தில் பலி பால் சொசைட்டி ஊழியர் சாலை விபத்தில் பலி
பால் சொசைட்டி ஊழியர் சாலை விபத்தில் பலி
பால் சொசைட்டி ஊழியர் சாலை விபத்தில் பலி
பால் சொசைட்டி ஊழியர் சாலை விபத்தில் பலி
ADDED : ஜூலை 17, 2024 06:26 AM
பாகூர் : சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பால் சொசைட்டி ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கரையாம்புத்துார் அடுத்துள்ள பனையடிக்குப்பத்தை சேர்ந்தவர் பத்மநாபன் 47; இவர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 13ம் தேதி, தனது பைக்கில் கரையாம்புத்துார் நோக்கி சென்றார். அப்போது, அங்குள்ள சிறிய பாலம் அருகே சென்ற போது, பின்னால் வந்த ஸ்கூட்டி மோதியது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பத்மநாபனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.