ADDED : ஜூலை 17, 2024 06:25 AM

பாகூர் : கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசை படகு, மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சதா 50; மீனவர்.
இவர் தலைமையில், அதே பகுதியை சேர்ந்த 25 பேர் குழுவாக சேர்ந்து கண்ணா விசைபடகு மற்றும் வலைகளை வாங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கடந்த 14ம் தேதி திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
தகவலறிந்த மீனவர்கள் பைபர் படகில் சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் விசை படகும், வலைகளும் தீயில் எரிந்து சேதமானது.
படகு தீ பிடித்து எரிந்த சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.