ADDED : ஜூன் 26, 2024 07:29 AM
புதுச்சேரி, : பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்து, 27; பெயிண்டர். நேற்று பாரதி வீதி வழியாக அவர் சென்ற போது, பெண் ஒருவர் அவரிடம் பணம் கேட்டார்.
பணம் இல்லை என கூறினார். அந்த பெண்ணுடன் வந்த முரளி மற்றும் ஒருவர், முத்துவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த முத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில், ஒதிஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து முரளி உட்பட இருவரை தேடிவருகின்றனர்.