/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசுப் பள்ளியில் உணவுக்கூடம் திறப்பு அரசுப் பள்ளியில் உணவுக்கூடம் திறப்பு
அரசுப் பள்ளியில் உணவுக்கூடம் திறப்பு
அரசுப் பள்ளியில் உணவுக்கூடம் திறப்பு
அரசுப் பள்ளியில் உணவுக்கூடம் திறப்பு
ADDED : ஜூன் 26, 2024 07:30 AM

புதுச்சேரி : பெத்துச்செட்டிப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில், 320 மாணவர்கள் பயன் பெறும் வகையில், உணவுக்கூடம் பயன்பாட்டிற்கு வந்தது.
பெத்துச்செட்டிப்பேட்டை, அரசு தொடக்கப்பள்ளியில், ஸ்னாம் அலாய்ஸ் பிரைவேட் லிட்., நிறுவனத்தை சேர்ந்த, ஸ்ரீகாந்த் சிவராமனால், ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி போர்ட் மூலம், ரூ. 40 லட்சம் செலவில், மாணவர்களுக்காக, உணவு உண்ணும் கூடம், இருக்கை, மற்றும் மேசைகள் பயன்பாட்டிற்கு வந்தன.
இந்த உணவுக்கூடத்தை, சினாம் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொதுமேலாளர் சந்தான கிருஷ்ணன் திறந்து வைத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் தமயந்தி ஜாக்குலினிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி தலைவர் ராஜேஷ், வருகை தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் மூக்கையா மற்றும் சினாம் அலாய்ஸ் பிரைவேட் லிட்., நிறுவன மேலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பெண் கல்வி பள்ளிக்கல்வித் துணை இயக்குனர் சிவராமன், வட்டம் 1, பள்ளிக்கல்வித் துணை ஆய்வாளர் குலசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இந்த உணவுக்கூடம் மூலம், 320 மாணவர்கள் பயன்பெறுவர்.