/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ரயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு
ரயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு
ரயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு
ரயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு
ADDED : ஜூலை 31, 2024 04:04 AM
புதுச்சேரி : புதுச்சேரிக்கு வந்த ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணாவை, அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், அகில பாரத நுகர்வோர் அமைப்பான ஏ.பி.ஜி.பி., நாடு தழுவிய அளவில் ரயில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கருத்தாய்வு செய்தது, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அந்த கோரிக்கை மனுவில்:
ரயில் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். காத்திருப்பு டிக்கெட் விநியோக உச்சவரம்பு கடைபிடித்து ரயில் பயணிகள் நெரிசலை குறைக்க வேண்டும். முன்பதிவுள்ள 10 பெட்டிகளும் மற்றும் முன்பதிவு இல்லாத 10 பெட்டிகளுடன் கூடிய அம்ருத் பாரத் ரயில் முக்கிய நகரங்களுக்கிடையே நாடு முழுவதும் விடப்பட வேண்டும்.
மேலும், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கொடுத்துள்ள மற்றொரு மனுவில், புதுச்சேரி - சென்னைக்கும் இடையே பகல் நேரங்களில் இரு ரயில் விட வேண்டும்.
புதுச்சேரிக்கும் - பெங்க ளூரு இடையே தினசரி இரவு ரயில் விடப்பட வேண்டும் விழுப்புரம் -திண்டுக்கல் மற்றும் மதுரை - புனலுார் ரயிலை ஒரே ரயிலாக மாற்றி அமைத்து புதுச்சேரியில் இருந்து கொல்லம் வழியாக ரயில் விட்டு, சபரிமலைக்கு செல்ல வசதியை செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.