/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறப்பு வரி வசூல் முகாம்; ஆணையர் பார்வை சிறப்பு வரி வசூல் முகாம்; ஆணையர் பார்வை
சிறப்பு வரி வசூல் முகாம்; ஆணையர் பார்வை
சிறப்பு வரி வசூல் முகாம்; ஆணையர் பார்வை
சிறப்பு வரி வசூல் முகாம்; ஆணையர் பார்வை
ADDED : ஜூலை 31, 2024 04:05 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் காட்டேரிக்குப்பத்தில் நடந்த சிறப்பு வரி வசூல் முகாமை ஆணையர் எழில்ராஜன் பார்வையிட்டு ரசீது வழங்கினார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 42 கிராமங்களில், கடந்த 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை வீடு, சொத்து, குடிநீர், தொழில் உரிம கட்டணம் மற்றும் வரி பாக்கி செலுத்துவதற்கான வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காட்டேரிக்குப்பம் கொம்யூன் அலுவலகத்தில் நடந்து வரும் வரிவசூல் சிறப்பு முகாமை ஆணையர் எழில்ராஜன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
சிறப்பு முகாமில், காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம் கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது குடிநீர், வீடு, சொத்து உள்ளிட்ட வரி பாக்கிகளை செலுத்தி ரசீது பெற்று கொண்டனர்.
முகாமில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.