/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கலை விழா: முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் புதுச்சேரி கலை விழா: முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி கலை விழா: முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி கலை விழா: முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி கலை விழா: முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 17, 2024 06:10 AM
புதுச்சேரி : புதுச்சேரி கலை விழா தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி கலை விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு புதுச்சேரி கலை விழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் சட்டசபையில் நேற்று நடந்தது.
சபாநாயகர் செல்வம், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, செய்தி விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள், சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன், புதுச்சேரி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர் பத்மாவதி, தொடர்பு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.