Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பயிர் காப்பீட்டை புதுப்பிக்க தவறிய வங்கி ரூ.2.75 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

பயிர் காப்பீட்டை புதுப்பிக்க தவறிய வங்கி ரூ.2.75 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

பயிர் காப்பீட்டை புதுப்பிக்க தவறிய வங்கி ரூ.2.75 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

பயிர் காப்பீட்டை புதுப்பிக்க தவறிய வங்கி ரூ.2.75 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

ADDED : ஜூலை 17, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : பயிர் காப்பீட்டை புதுப்பிக்க தவறியதால் விவசாயிக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு, பாரத ஸ்டேட் வங்கியின் விவசாய அபிவிருத்தி கிளை, ரூ.2,75,468 வழங்க, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்தவர் சையது அகமது. அவரது, 14 ஏக்கர் நிலத்தில் கடந்த, 2016,ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால், பயிர்கள் சேதமடைந்தன.

அவர், விவசாய கிசான் கார்ட் திட்டத்தின் கீழ், காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கி, விவசாய அபிவிருத்தி கிளையில் கடன் பெற்றிருந்தார். அதன் கீழ் விவசாய பயிர்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால், இழப்பீடு பெறுவதற்கு வங்கியின் மூலமே பயிர் காப்பீடு வசதியும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த, 2016ம் ஆண்டு பயிர் காப்பீட்டை வங்கி புதுப்பிக்க தவறியதால் பயிர் சேதத்திற்கு, ரூ.3,20,624, நஷ்டம் ஏற்பட்டதாகவும், வங்கி சேவையில் குறைபாடு உள்ளதாகவும், பயிர் சேதத்தை வங்கி வழங்க உத்தரவிடக்கோரி புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் மனு செய்தார்.

இதைத்தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி காரைக்கால் விவசாய அபிவிருத்தி கிளை மீது விசாரணை நடந்து வந்தது. இதில் மனுதாரரின் பயிர்களுக்கு கடந்த, 2016ம் ஆண்டுக்குரிய, காப்பீடு செய்ய தவறியதன் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி விவசாய அபிவிருத்தி கிளையின் சேவை குறைபாடு மற்றும் கவனக்குறைவாக உள்ளது நிரூபணமானது.

இதனால் விவசாயி சையது முகமதுவிற்கு சேவை குறைபாட்டால் ஏற்பட்ட பயிர் நஷ்டத்திற்கு, ரூ.2,40,468, நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் வங்கி சேவை குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, ரூ.25,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவிற்கு ரூ.10,000, பாரத ஸ்டேட் வங்கி விவசாய அபிவிருத்தி கிளையின் காரைக்கால் நிர்வாகம் வழங்கிட ஆணையத்தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, மற்றும் ஆறுமுகத்தின் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us