ADDED : ஜூலை 17, 2024 12:27 AM

புதுச்சேரி, : மேட்டுப்பாளையம் மேயர் ராமலிங்கம் அரசு துவக்கப்பள்ளியில் மாணவர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைமையாசிரியை சாவித்திரி தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு நடனமாடுதல், பாட்டு பாடுதல், கவிதை கூறுதல், பட்டிமன்றம், வினாடி வினா, மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கலைவாணி, நாகம்மா, சித்ரா, கிரிஜா, சத்யா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சரோஜா நன்றி கூறினார்.