/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் கரும்பு பயிரிடும் நில பரப்பளவு சுருங்கியது: 2 சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டதால் சோகம் புதுச்சேரியில் கரும்பு பயிரிடும் நில பரப்பளவு சுருங்கியது: 2 சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டதால் சோகம்
புதுச்சேரியில் கரும்பு பயிரிடும் நில பரப்பளவு சுருங்கியது: 2 சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டதால் சோகம்
புதுச்சேரியில் கரும்பு பயிரிடும் நில பரப்பளவு சுருங்கியது: 2 சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டதால் சோகம்
புதுச்சேரியில் கரும்பு பயிரிடும் நில பரப்பளவு சுருங்கியது: 2 சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டதால் சோகம்
ADDED : ஜூன் 11, 2024 05:53 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் கரும்பு பயிர்சாகுபடி பரபரப்பளவு 95 சதவீதற்கு மேல் சுருங்கியதால்கரும்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் கியூபா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் உத்தரபிரதேசம் சர்க்கரை உற்பத்தி யில் முதல் மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கணிசமான பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை உற்பத்தி நடந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் திருக்கனுார், திருபுவனை, அரியூர், மடுகரை, பாகூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 24 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது.
இங்கு, சாகுபடி செய் யும் கரும்புகள் அரியூர் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இதன் மூலம் கரும்பு விவசாயிகளும், ஆலை செயல்பாட்டால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்றனர். ஆலையை சுற்றி இயங்கிய ஓட்டல்கள், கடைகளிலும் வியாபாரம் சிறப்பாக இருந்தது.
அரியூர் ஈ.ஐ.டி. சர்க்கரை ஆலை 10 ஆண்டிற்கு முன்பும், லிங்கா ரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை 5 ஆண்டிற்கு முன்பு மூடப்பட்டது.
அரியூர் ஆலை இருந்த இடம் தெரியாத அளவுக்கு அங்கிருந்து இயந்திரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விட்டது. லிங்காரெட்டிப்பாளையத்தில் ஆலை மூடிக்கிடக்கிறது.
இந்த 2 சர்க்கரை ஆலையும் மூடப்பட்டதால், புதுச்சேரியில் பயிரிப்படும் கரும்புகள் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பட்டு வருகிறது.
கரும்பு பயிருக்கு அதிக லாபம் கிடைக்காதது, புதுச்சேரியில் இருந்த 2 சர்க்கரை ஆலையும் மூடல், நீண்ட தொலைவுக்கு கரும்பு கொண்டு செல்வது போன்ற காரணங்கள் புதுச்சேரியில் கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டிற்கு முன்பு, 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவாக இருந்த கரும்பு சாகுபடி தற்போது வெறும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு குறைந்து விட்டது.
கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன் கூறுகையில்;
கரும்பு பயிரிட்டு அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பினால், ஒரு டன்னுக்க ரூ. 2919 தருகின்றனர். இதில், கரும்பு வெட்டும் கூலியாக டன்னுக்கு ரூ.1200 முதல் ரூ. 1500 வரை செலவாகி விடுகிறது. மீதம் டன்னுக்கு ரூ. 1419 மட்டுமே கிடைக்கிறது.
இடுபொருட்கள் செலவு, வண்டி என ஏராளமான செலவுகள் ஏற்படுவதால் பல விவசாயிகள் கரும்பு பயிரிட ஆர்வம் காட்டுவது இல்லை. சிறு குறு விவசாயிகளுக்கு லாபமும் கிடைப்பது இல்லை. இதனால் கரும்புக்கு பதிலாக வேறு பயிர் சாகுபடி செய்ய துவங்கி விட்டனர்.
ஈ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ரவி கூறுகையில்; கரும்பு நல்ல லாபம் தரக்கூடிய பயிர். ஆனால் அதில் ஏற்படும் இடர்பாடுகளை சரியான நேரத்தில் களைய அரசு உதவி செய்தால், விவசாயிகள் அதில் லாபம் பார்க்க முடியும்.
ஈ.ஐ.டி. பாரி நிர்வாகம் வி.46 ரக கரும்பு, பயிரிட்டால் ஏக்கருக்கு ரூ. 8000 மானியம் என அறிவித்துள்ளது. அவை விவசாயிகளுக்கு சரியாக சென்று சேரவில்லை.
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
இதனால் பெரிய விவசாயிகள் வங்களில் கடன் பெற்று கரும்பு பயிரிட்டு அதில் லாபம் பார்க்கின்றனர். சிறு குறு விவசாயிகளுக்கு லாபம் இல்லை.
அருகில் உள்ள தமிழக சர்க்கரை ஆலைக்கு புதுச்சேரி விவசாயிகள் கரும்பு அனுப்புவதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்ய முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் பொக்கோ போயா நோய் பாதிப்பால் சேதமடைந்த கரும்புகளுக்கு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்.
கூடுதலாக பிடித்தம் செய்யும் சோலை கழிவுக்கான பணத்தை விவசாயிகளுக்கு அரசு பெற்று தர வேண்டும் என கூறினார்.