/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி குத்து தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி குத்து
தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி குத்து
தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி குத்து
தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி குத்து
ADDED : ஜூன் 11, 2024 05:53 AM
புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் ரேணுகா மாரியம்மன் கோவில் கட்டுவதற்கான பூஜை நேற்று நடந்தது. அதில், ஊர் மக்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜை நிகழ்ச்சியில் ஏன் என்னை அழைக்கவில்லை என அந்த பகுதியை சேர்ந்த சரவணன் கேட்டு பிரச்னை செய்தார்.
அதனை, தனியார் கம்பெனியில் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் ஏன் பிரச்னை செய்கிறாய் என சரவணனை கண்டித்தார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த , சரவணன் அங்கிருந்த கத்தியால், சங்கரை குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனை தேடிவருகின்றனர்.