/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரைச் சாலையில் கஞ்சா விற்ற மூவர் கைது கடற்கரைச் சாலையில் கஞ்சா விற்ற மூவர் கைது
கடற்கரைச் சாலையில் கஞ்சா விற்ற மூவர் கைது
கடற்கரைச் சாலையில் கஞ்சா விற்ற மூவர் கைது
கடற்கரைச் சாலையில் கஞ்சா விற்ற மூவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 05:54 AM
புதுச்சேரி: கடற்கரைச்சாலை பழைய சாராய ஆலை அருகே கஞ்சா விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கடற்கரைச்சாலை, பழைய சாராய ஆலை அருகே சிலர் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
பெரியக்கடை சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்த மூவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், புதுச்சேரி கோவிந்தசாலை, அந்தோணியர் கோவில் வீதி அரசு குடியிருப்பைச் சேர்ந்த ஆகாஷ், 24; மரக்காணம், கலைஞர் நகரைச் சேர்ந்த அஜித், 26; மரக்காணம் சந்தைதோப்பு ஈஸ்வரன், 20; என தெரியவந்தது. மூவரிடம் நடத்திய சோதனையில், 130 கிராம் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா மற்றும் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.