/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனுமதி பெறாத பாடல் நிகழ்ச்சி: 4 பேர் மீது வழக்கு அனுமதி பெறாத பாடல் நிகழ்ச்சி: 4 பேர் மீது வழக்கு
அனுமதி பெறாத பாடல் நிகழ்ச்சி: 4 பேர் மீது வழக்கு
அனுமதி பெறாத பாடல் நிகழ்ச்சி: 4 பேர் மீது வழக்கு
அனுமதி பெறாத பாடல் நிகழ்ச்சி: 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 11, 2024 05:41 AM
அரியாங்குப்பம்: கோவில் திருவிழாவில் அனுமதி பெறாமல் ஆர்க்கெஸ்ட்ரா நடத்திய நிகழ்ச்சியால் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
அதையடுத்து, வருவாய் துறை, போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் இரவு ஆர்கெஸ்ட்ரா நடத்தப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த, தவளக்குப்பம் போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஒலிபெருக்கி மூலம், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சினிமா பாடல்களுடன் ஆர்க்கெஸ்ட்ரா நடத்திய, அந்த ஊரை சேர்ந்த சதீஷ், சூர்யா, தர்மன், குருநாதன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.