ADDED : மே 11, 2025 11:29 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி சாந்தி நகர், கட்டபொம்மன் வீதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உழவர்கரை நகராட்சி சார்பில், ரூ. 15 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூஜை செய்து துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன், இளநிலை பொறியாளர் சாந்தன், காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.