/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவிலை இடித்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் கோவிலை இடித்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கோவிலை இடித்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கோவிலை இடித்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கோவிலை இடித்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : மே 11, 2025 11:28 PM

அரியாங்குப்பம்: சாலையோரத்தில் இருந்த புற்று மாரியம்மன் கோவிலை இடித்ததை, கண்டித்து இந்து முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் வரை இருபுறங்களில், சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. வீராம்பட்டினம் சாலை, செட்டிக்குளம் பகுதியில், இருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்பு வீடுகளை பொதுப்பணித்துறை, அதிகாரிகள் கடந்த மாதம் அதிரடியாக அகற்றினர்.
அந்த பகுதியில் இருந்து புற்றுமாரியம்மன் கோவிலும், அகற்றப்பட்டது. கோவிலை இடித்து தள்ளிய, பொதுப்பணித் துறையை கண்டித்து, அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் அருகே, இந்து முன்னணி சார்பில், நேற்று காலை 10:00 மணியளவில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்து முன்னணி தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கி, கண்டன உரை நிகழ்த்தினார்.
மாநில செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள் முருகையன், அரியாங்குப்பம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நகர தலைவர் குமார் நன்றி கூறினார்.