/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ் ஸ்டாண்டில் அடிக்காசு கடைகள் முதல்வர் ஒதுக்கீடு ஆணை வழங்கல் பஸ் ஸ்டாண்டில் அடிக்காசு கடைகள் முதல்வர் ஒதுக்கீடு ஆணை வழங்கல்
பஸ் ஸ்டாண்டில் அடிக்காசு கடைகள் முதல்வர் ஒதுக்கீடு ஆணை வழங்கல்
பஸ் ஸ்டாண்டில் அடிக்காசு கடைகள் முதல்வர் ஒதுக்கீடு ஆணை வழங்கல்
பஸ் ஸ்டாண்டில் அடிக்காசு கடைகள் முதல்வர் ஒதுக்கீடு ஆணை வழங்கல்
ADDED : செப் 26, 2025 04:54 AM

புதுச்சேரி: புது பஸ் ஸ்டாண்டில் 53 அடிக்காசு கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஒதுக்கீடு ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி ராஜிவ் புது பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே இருந்த 31 கடைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. புதிதாக ஏலம் விட்டு கடைகளை ஒதுக்கீடு செய்ய கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இருப்பினும், ஏற்கனவே புது பஸ் ஸ்டாண்டில் கடைகள் வைத்துள்ளவர்கள் தங்களுக்கு மீண்டும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தொடர்ந்து அரசினை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கடைகள் திறப்பது, ஒதுக்கீடு செய்வது தொடர்பாக புதுச்சேரி அரசு தனது முடிவினை அறிவிக்காமல் மவுனமாக உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், புது பஸ் ஸ்டாண்ட்டில் ஏற்கனவே இருந்த அடிக்காசு கடைகளுக்கு மீண்டும் கடைகள் வைப்பதற்கான ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.
நேரு எம்.எல்.ஏ., முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான புதுச்சேரி நகராட்சி ஆணையை வழங்கினார். பூக்கடைகள் -13, பழக்கடைகள்-39, மாலைக் கடை- 1 என, மொத்தம் 53 கடைகளுக்கான ஆணை வழங்கப்பட்டது. புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, வருவாய் அதிகாரி பிரபாகரன், சிவா இளங்கோ உடனிருந்தனர்.