ADDED : செப் 26, 2025 04:53 AM

புதுச்சேரி: சேதாரப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கொலு விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை ஹேமமாலினி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக வட்டம் -5 பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆசிரியை கவுசல்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் சமுதாயத்தில் நமக்கு பல நிலைகளில் உதவி புரியும் சமூக உதவியாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.