/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி தாராளம்:பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்கிறது அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி தாராளம்:பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்கிறது
அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி தாராளம்:பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்கிறது
அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி தாராளம்:பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்கிறது
அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி தாராளம்:பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்கிறது

ஊதிய உயர்வு
சுகாதாரத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்.ஆர்.எச்.எம்., ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.எனவே, சம்பளம் உயர்த்தி கொடுத்துள்ளோம்.
12 ஆம்புலன்ஸ்
புதிதாக 12 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. டிரைவர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். லிங்காரொட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காரைக்கால் மதர் தெரேசா கல்லுாரியில் காலி பணியிடம் விரைவில் நிரப்படும்.
கொம்யூன் ஊழியர்கள்
கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 196 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறையில் 119 வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கோப்பு கவர்னரிடம் உள்ளது. விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
புதுச்சேரி மாநாகராட்சி
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளோடு, அரியாங்குப்பம், வில்லியனுார் ஒட்டிய நகர அமைப்பு பகுதிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும்.
நல்வாழ்வு ஊதியம்
இடுகாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதம் நல்வாழ்வு ஊதியமாக ரூ.3,000 வழங்கப்படும். இதன் மூலம், 600 குடும்பங்கள் பயன்பெறும்.
மதிப்பூதியம் உயர்வு
அங்கன்வாடிகளில்பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் மாத மதிப்பூதியம் ரூ. 6,450ல் இருந்து ரூ. 12 ஆயிரமாகவும், உதவியாளர்களின் மாத மதிப்பூதியம் ரூ. 4,375 இல் இருந்து ரூ. 10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் சமூக வல்லுநர்களின் ஊதியம் ரூ.10 ஆயிரமாகஉயர்த்தி வழங்கப்படும்.
மீண்டும் வேலை
குடிசை மாற்று வாரியத்தில் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம். இதற்காக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, அங்கு ஏற்கனவே பணிபுரிந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். பாட்கோவை தலைநிமிர வைத்து அதிலும் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்கப்படும். பி.டி.டி.சி., போன்ற நிறுவனங்களில் நிர்வாகம் சரியாக நடைபெற்றால் அவற்றிற்கு வேண்டியதை அவர்களே செய்து கொள்ளலாம்.
பணி நிரந்தரம்
ஒ.சி.எம்., பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து தலைமை செயலரிடம் பேசி உள்ளேன். ஏற்கனவே சட்டசபை பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அந்த விதிகளை பின்பற்றி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரிசுகளுக்கு வேலை
கருணை அடிப்படையில் விண்ணப்பித்த வாரிசுதாரர்களுக்கு எம்.டி.எஸ்., ஆக பொதுப்பணித் துறையில் பணி வழங்கி உள்ளோம். சுகாதாரத்துறையில் கொடுத்து கொண்டு உள்ளோம். அதுபோல் பிற துறைகளில் உள்ள வாரிசுதார்களுக்கு ஒரு முறை தளர்வு அடிப்படையில் பணி வழங்க கோப்பு தயாராகி உள்ளது. விரைவில் அவர்களுக்கு பணி வழங்கப்படும்.