/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் அடையாள அட்டையில் இ.பி.ஐ.சி., எண்கள் திருத்தம் தேர்தல் அடையாள அட்டையில் இ.பி.ஐ.சி., எண்கள் திருத்தம்
தேர்தல் அடையாள அட்டையில் இ.பி.ஐ.சி., எண்கள் திருத்தம்
தேர்தல் அடையாள அட்டையில் இ.பி.ஐ.சி., எண்கள் திருத்தம்
தேர்தல் அடையாள அட்டையில் இ.பி.ஐ.சி., எண்கள் திருத்தம்
ADDED : மே 14, 2025 05:04 AM
புதுச்சேரி : தேர்தல் அடையாள அட்டையின் இ.பி.ஐ.சி., எண்களின் குழப்பம் தீர்வுக்கு வந்தது.
புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2005ம் ஆண்டு முதல் தேர்தல் அடையாள அட்டையில் (இ.பி.ஐ.சி) ஒரே மாதிரியான எண்கள் பல வாக்காளர்களுக்குக் கிடைத்திருந்த குழப்பம் தற்போது முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுதும் உள்ள 4,123 சட்டசபை தொகுதிகளில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் 99 கோடியே மேற்பட்ட வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. சராசரியாக ஒவ்வொரு நான்கு வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்காளருக்கு மட்டுமே இப்படியான குழப்பம் இருந்தது. இதையடுத்து தெளிவான பரிசோதனையின்போது, ஒரே மாதிரி இ.பி.ஐ.சி., எண்கள் இருந்தாலும், அந்த வாக்காளர்கள் உண்மையானவர்கள் என்றும், அவர்கள் வெவ்வேறு தொகுதிகளிலும் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்களாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர்களுக்கு தனித்தனியாக புதிய EPIC எண்கள் கொண்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பிரச்னை வருவதற்கு, கடந்த 2005ம் ஆண்டு தொகுதி வாரியாக வேறுபட்ட எழுத்தெண் தொடர்கள் பயன்படுத்தப்பட்டதாகும்.
கடந்த 2008ம் ஆண்டு தொகுதிகள் மாறிய பிறகும் சிலர் பழைய தொடர்களையே தவறுதலாக பயன்படுத்தியதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது யாரும் தவறாக வாக்களிக்க முடியாது.
ஒருவருடைய பெயர் இருந்த வாக்குச்சாவடியில் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும். இந்த நீண்ட நாள் பிரச்னையை சரி செய்யும்பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புதுச்சேரி தேர்தல் துறை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.