/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூத்தாண்டவர் திருக்கல்யாணம் தாலி கட்டிக்கொண்ட பக்தர்கள் கூத்தாண்டவர் திருக்கல்யாணம் தாலி கட்டிக்கொண்ட பக்தர்கள்
கூத்தாண்டவர் திருக்கல்யாணம் தாலி கட்டிக்கொண்ட பக்தர்கள்
கூத்தாண்டவர் திருக்கல்யாணம் தாலி கட்டிக்கொண்ட பக்தர்கள்
கூத்தாண்டவர் திருக்கல்யாணம் தாலி கட்டிக்கொண்ட பக்தர்கள்
ADDED : மே 14, 2025 05:05 AM
வில்லியனுார்: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் சுவாமிக்கு திருக்கல்யாணம், பக்தர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று (13ம் தேதி) இரவு 9:00 மணிக்கு மேல் கூத்தாண்டவர் சுவாமிக்கு திருக்கல்யாணம், பக்தர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சகள் நடந்தன, தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. இந்தாண்டு கோவில் திருப்பணியால் திருநங்கைகள் அழகி போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் திருவிழா கலையிழந்து வெரிச்சோடி காணப்பட்டது.
முக்கிய விழாவாக இன்று (14ம் தேதி) காலை 9:30 மணியளவில்தேர் திருவிழா நடக்கிறது. விழாவில் புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். மாலை 4:30 மணியளவில் அழுகள நிகழ்ச்சி, 29ம் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சி நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பிள்ளையார்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.