/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிதி கமிஷனில் சேர்க்காமல் புதுச்சேரி புறக்கணிப்பு சட்டசபையில் தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் காரசாரம் நிதி கமிஷனில் சேர்க்காமல் புதுச்சேரி புறக்கணிப்பு சட்டசபையில் தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் காரசாரம்
நிதி கமிஷனில் சேர்க்காமல் புதுச்சேரி புறக்கணிப்பு சட்டசபையில் தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் காரசாரம்
நிதி கமிஷனில் சேர்க்காமல் புதுச்சேரி புறக்கணிப்பு சட்டசபையில் தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் காரசாரம்
நிதி கமிஷனில் சேர்க்காமல் புதுச்சேரி புறக்கணிப்பு சட்டசபையில் தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் காரசாரம்
ADDED : மார் 27, 2025 03:50 AM
புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;
சிவசங்கர் (சுயேச்சை): மாநிலங்களின் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பொதுக்கணக்கு உள்பட பல்வேறு விஷயங்களில் புதுச்சேரியை மாநிலமாக மத்திய அரசு கருதுகிறது. எனவே புதுச்சேரி அரசு மத்திய அரசினை அணுகி இந்த வட்டியில்லா கடனை பெற வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததில் இருந்தே புதுச்சேரியை இதில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இந்த திட்டம் மாநிலங்களுக்கு பொருந்தும். யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. நிதி கமிஷனில் நம்மை சேர்க்கவில்லையே. அப்படி இருக்கும்போது எப்படி நம்மால் கடன் பெற முடியும்.
நாஜிம் (தி.மு.க): முதல்வரின் பதில் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: முதல்வர் எவ்வளவு மனவேதனையில் இதனை தெரிவித்துள்ளார். பா.ஜ., அமைச்சர்கள் அடிக்கடி மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர். ஏன் மத்திய அமைச்சர்களிடம் சொல்லி இதனை பெறவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: எப்போதும் போல திரித்து பேச வேண்டாம். மத்திய அரசு புதுச்சேரிக்கு அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. நீங்கள் காங்., கூட்டணியில் இருந்து உள்ளீர்கள். அப்போது ஏன் புதுச்சேரிக்கு ஏதும் கேட்டு பெறவில்லை.
எதிர்கட்சி தலைவர் சிவா: நாங்கள் செய்யவில்லை என்பதால் நீங்கள் வந்து உள்ளீர்கள்.
நீங்கள் ஏன் அதனை செய்யவில்லை. புதுச்சேரி அரசு கேட்ட மழை நிவாரணத்தை கூட மத்திய அரசு தரவில்லை.
கல்யாணசுந்தரம் (பா.ஜ): மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அரசு கொடுத்துள்ளது. ரேஷன் கடை திறப்பு உள்பட புதுச்சேரி அரசு எது கேட்டாலும் அனுமதியை தந்து வருகிறது. அதனால் சிறப்பான ஆட்சியை தர முடிகிறது.
நாஜிம் (தி.மு.க): மத்திய அரசு கொடுத்த பல்வேறு நிதி குறைந்துவிட்டது. வாயால் வடை சுட வேண்டாம்.
அமைச்சர் நமச்சிவாயம்: நாங்கள் வாயால் வடை சுடவில்லை. மத்திய அரசிடம் நிதியுதவி கேட்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. நாம் கேட்பதையெல்லாம் கொடுத்துவிட மாட்டார்கள்.
முதல்வர் ரங்கசாமி: நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாம் கேட்கின்ற நிலையில் உள்ளோம். அவர்கள் கொடுக்கின்ற நிலையில் உள்ளனர். எனவே கொடுக்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்.
நாஜிம் (தி.மு.க): நிதி கமிஷனில் சேர்க்காததால் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்க வேண்டும்.
சிவசங்கர் (சுயேச்சை): சமீபத்தில் பிரிக்கப்பட்ட ஜம்மு-லடாக் கூட நிதி கமிஷனில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமரை சந்தித்தால் கண்டிப்பாக புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பார்கள்.
சபாநாயகர் செல்வம்: அவை மாநிலங்களாக இருந்து யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. ஆனால் நம்முடைய பிரச்னை வேறு.
இவ்வாறு விவாதம் அனல் பறந்தது.