/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை 4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
ADDED : மார் 27, 2025 03:50 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மர்ம கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், மர்ம நபரின் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்தார். அந்த குரூப்பில் உள்ளவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியிருந்தனர். மர்ம நபர்கள் அனுப்பிய லிங் மூலம், 35 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
பல்கலைக்கழ மாணவி நிவேதிதா. இவரை தொடர்பு கொண்ட நபர், வங்கி அதிகாரி போல பேசினர். அவரது கிரெடிட் கார்டு விபரங்கள் அதனுடன் ஓ.டி.பி., எண்ணை கொடுத்தார். அதனை தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து 22 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
மேலும், முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரிடம் 12 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து 31 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். இதுகுறித்து, 4 பேர் கொடுத்து புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.