ADDED : மே 11, 2025 11:31 PM

காரைக்கால்: காரைக்காலில் தி.மு.க., நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம், மாநில அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினர் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் அடாவடித்தனத்தை ஒடுக்குகிற வகையில் எதிர் தாக்குதல் நடத்தி, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள்.
இந்திய ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் ஊர்வலம் நடத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, காரைக்காலில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து, 10 நாட்களுக்குள் மாநில கழகத்திற்கு பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை அளிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.