/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் பொறியாளர்கள் தினம் ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் பொறியாளர்கள் தினம்
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் பொறியாளர்கள் தினம்
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் பொறியாளர்கள் தினம்
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் பொறியாளர்கள் தினம்
ADDED : செப் 25, 2025 11:28 PM

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியின் தொழில்முறை அமைப்புகள் சார்பில், பொறியாளர்கள் தின விழா நடந்தது.
கல்லுாரிமுதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்வியாளர் முருகவேல் பாலா, ஷீல்ட் குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீராம் ஹரிஹரன் ஆகியோர் பொறியியல் திறன்கள், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் சான்றிதழ்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
கல்லுாரியின் தலைவர் ராஜா, செயலாளர் சிவ்ராம் ஆல்வா, பொருளாளர் விமல், அறங்காவலர் சிந்து, டீன் அகாடெமிக்ஸ் கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில், ஐ.எஸ்.டி.இ., ஐ.இ.இ.இ., ஐ.இ.டி.இ., சி.எஸ்.ஐ. மற்றும் ஐ.இ.ஐ., ஆகிய தொழில்நுட்ப சொசைட்டிகள் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லுாரியின் தொழில்முறை அமைப்புகள் தலைவர் ஜெபாஸ்டின் சோனியா ஜாஸ் ஒருங்கிணைந்தார்.