மக்கள் வார விழா மின் இணைப்பு சேவை
மக்கள் வார விழா மின் இணைப்பு சேவை
மக்கள் வார விழா மின் இணைப்பு சேவை
ADDED : செப் 25, 2025 11:29 PM
புதுச்சேரி:மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மின்துறை சார்பில் மக்கள் சேவை வார நிகழ்ச்சி நடக்கிறது. இதில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் பெறப்படும் தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு வீட்டு உபயோகத்திற்கான புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், கூடுதல் மற்றும் குறைவு மின் பளு, ஆகியவற்றுக்கு உடனடியாக மின் இணைப்பு சேவை வழங்கப்படும். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.