/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குருவிநத்தம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா குருவிநத்தம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா
குருவிநத்தம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா
குருவிநத்தம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா
குருவிநத்தம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா
ADDED : ஜூன் 10, 2025 10:19 PM

பாகூர்; குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா நடந்தது.
சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் சங்கரதேவி நோக்கவுரையாற்றினார். நல்லாசிரியர் வெற்றிவேல் கருத்துரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை சமுதாய நலப்பணித் திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் துவக்கவுரையாற்றினார். கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலாளர் பாலகங்காதரன் சிறப்புரையாற்றினார். சுற்றுச்சூழல் தொடர்பான வினாக்களுக்கு விடையளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.